Malaysia

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கு 13 கோடி வெள்ளி டத்தோஸ்ரீ இரமணன் அறிவிப்பு

கோலாலம்பூர்,அக்.13-
மலேசிய இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக அரசாங்கம் இதுவரை 13 கோடியே 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளதாக தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் கூறினார்.

தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் 3 கோடி வெள்ளியும் அமானா இக்தியார் பெண் திட்டத்தின் மூலம் 5 கோடி வெள்ளியும் பேங்க் ரக்யாட் பிரிவ்-ஐ திட்டத்தின் மூலம் 5 கோடி வெள்ளி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்போது
புதியதாக ஐ-பேப் மூலம் 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் முறையாகவும் பயன்படுத்தவில்லை என்றால் கூடுதல் நிதியை எப்படி கோர முடியும் என்பதால் இந்நிதியை இந்தியர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரமணன் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் நலன் கருதி இந்திய வணிகர்களுக்கு உதவும் வகையில் பல உதவி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

இத்திட்டங்களின் வாயிலாக ஒதுக்கப்பட்ட நிதியை இந்திய சமுதாயம் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று மலேசிய இந்தியர் கூட்டுறவு கழக மாநாட்டில் உரையாற்றிய போது டத்தோஸ்ரீ ரமணன் அவ்வாறு கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button