கூட்டுறவு கழக மாநாட்டு இந்திய கூட்டுறவு கழகங்களுக்கு 30,000 வெள்ளி மானியம் டத்தோஸ்ரீ இரமணன் தகவல்
கோலாலம்பூர் அக்.13-
மலேசிய இந்திய கூட்டுறவுக் கழகங்கள் மாநாட்டில் பங்கேற்ற கூட்டுறவுக் கழங்களும் தலா 30,000 வெள்ளி மானியம் வழங்கப்படும் என்று தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் கூறினார்.
இந்த 30,000 வெள்ளி மானியத்திற்கு பங்கேற்ற கூட்டுறவு கழகங்கள் விண்ணப்பம் செய்யலாம். 100 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாட்டில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன.
இதில் 419க்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் இந்தியர்களுக்குச் சொந்தமானதாகும்.
இந்தக் கூட்டுறவுக் கழகங்களில் பல வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில் பல கழகங்கள் இயங்காமல் செயலிழந்துள்ளன என்று துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
இக்கழகங்களை எல்லாம் ஒன்றுப்படுத்துவது இந்த மாநாட்டின் நோக்கமாகும். அதேவேளையில் இந்திய கூட்டுறவுக் கழகங்கள் சந்தித்து வரும் சவால்களை கண்டறிவதுடன், எதிர்கால இலக்கங்களை திட்டமிடும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் சொன்னார்.



