Malaysia

கூட்டுறவு கழகங்களுக்கு உதவ தயார் கூட்டுறவு கழக மாநாட்டில் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி

கோலாலம்பூர் அக்.13-
இந்திய சமுதாயத்தின் நலன் கருதி கூட்டுறவு கழகங்களுக்கு உதவ தயாராக இருப்பதாக தொழில் முனைவோர் மேம்பாட்டு, கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் உறுதியளித்துள்ளார்.

என்னோடு இணைந்து கைகோருங்கள். உங்களுக்கு நான் உதவ தயாராக இருக்கிறேன். இந்தியர்களுக்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறேன். அந்த வகையில் நாட்டில் புதிய இந்தியர் கூட்டுறவு கழகங்கள் அமைக்கவும் நான் உதவ முன் வருகிறேன் என்று கூட்டுறவு கழகங்களுக்கான மாநாட்டில் உரையாற்றிய போது டத்தோஸ்ரீ ரமணன் அவ்வாறு அறிவிப்பு செய்தார்.

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ரக்யாட் மண்டபத்தில் மலேசிய இந்தியர் கூட்டுறவு கழகத்தின் மாநாட்டை டத்தோஸ்ரீ ரமணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button