
இந்திய சமுதாயம் கூட்டுறவு கழகங்கள் மூலம் முன்னேற்றம் காண வேண்டும்! டத்தோஸ்ரீ ரமணன் ஆலோசனை
கோலாலம்பூர்,அக்.13-
இந்திய சமுதாயம் கூட்டுறவு கழகத்தில் ஆர்வம் செலுத்தி அதன் மூலம் முன்னேற்றம் காண வேண்டும் என்று
தொழில் முனைவோர் மேம்பாட்டு,கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் மொத்தமாக 16,000 கூட்டுறவு கழகங்கள் வழி 72 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 419 கூட்டுறவு கழகங்கள் மட்டுமே இந்தியர்களுக்கு சொந்தமானதாக இருக்கிறது. இதில் 419 கூட்டுறவு கழகங்கள் வழி 2 லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த எண்ணிக்கை போதாது.
தேசிய நிலநிதி கூட்டுறவு கழகம் போல் நமது இதர கூட்டுறவு கழகங்கள் முன்னேற்றம் காண வேண்டும். கூட்டுறவு கழகங்கள் வழி இந்திய சமுதாயம் மென்மேலும் பயனடைய வேண்டும்.
இதற்காக இந்திய கூட்டுறவு கழகங்கள் தட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்திய கூட்டுறவு கழக மாநாடு மிகப்பெரிய அளவில் தமது அமைச்சின் கீழ் நடத்துவதாக டத்தோஸ்ரீ ரமணன் தெளிவுபடுத்தினார்.
இதுவரை நாட்டில் இதுபோன்ற ஒரு மாநாடு நடத்தப்படவில்லை.
இதுவே முதல் முறை என்பதால் இந்திய கூட்டுறவு கழகங்கள் முன்னேற்றத்தை நோக்கி வெற்றி நடை போட வேண்டும்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் கீழ் இந்திய சமுதாயத்தின் சிறு தொழில் முனைவோருக்கு பல வகைகளில் கடனுதவி வழங்கப்பட்டதாக ரமணன் சொன்னார்.



