Malaysia
போலி கைப்பேசி உபரி பாகங்கள் கண்டெடுப்பு ஈப்போ, சித்தியவான், தைப்பிங்லுள்ள 5 கடைகளில் பறிமுதல்.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, அக்.13
பயனீட்டாளர்களிடையே பிரபல்யமான
ஹுவாய் மற்றும் சம்சூங் ஆகிய இரண்டு வெவ்வேறு கைப்பேசிக்கான போலி உபரி பாகங்களை ஈப்போ, சித்தியவான், தைப்பிங் ஆகிய பட்டணங்களின் 5 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதாக
பயனீட்டாளர் விவகார மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சின்
பேராக் இயக்குனர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
கை பேசி வர்த்தக முத்திரை உரிமையாளர்களின் புகார் கிடைத்தது பேரில்
மொத்தம் ரிம 26,430 வெள்ளி மதிப்பு பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்டதாக
கூறினார்.



