Malaysia

சொக்சோவின் தீபாவளி கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது! வசதி குறைந்த மக்களுக்கும் அன்பளிப்பு வழங்கப்பட்டது

கோலாலம்பூர் அக்.15-
சொக்சோ எனப்படும் சமூக நல பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் செந்தூல் கெமினிட்டி மண்டபத்தில் தீபாவளி கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சம்மேளனத்தின் துணை தலைவர் டத்தோ பார்த்தீபன், செயலாளர் முத்தப்பன், பொருளாளர் பன்னீர் மற்றும் சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

இந்த நிகழ்வில் முதியோர்கள், சிறுவர்கள், ஆதரவற்ற இல்லங்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button