Malaysia

வாழ்க்கையில் முன்னேறி முன் நோக்கி செல்வோம்! டத்தோ ந.சிவகுமார் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், ஜன.1-
நாம் முன்னோக்கி செல்லும் ஆண்டாக 2025ஆம் புத்தாண்டு அமைய வேண்டும் என்று ம.இ.கா தேசிய பொருளாருமான டத்தோ ந.சிவகுமார் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

இந்திய சமுதாயம் சமயம் கல்வி பொருளாதாரத்தில் ஈடுபட்டு முருகன் அருளால் முன்னேறி முன் நோக்கி செல்ல வேண்டும் என்று மஹிமா அமைப்பின் தலைவருமான டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.

இங்கு குறை செல்பவர்கள் பல குறைகளை சொல்வார்கள். அதனை காதில் வாங்கி கொல்லாமல் நம் இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

குறிப்பாக கல்வியில் நமது முன்னேற்றம், நமது பொருளாதாரத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும்.

அந்த வகையில் நாம் முன்னோக்கி செல்ல சமயம், கல்வி, பொருளாதாரம் மிக முக்கியம். முருகன் அருளால் இந்த 2025ஆம் ஆண்டு நமக்கு புதிய பாதையை வகுக்க இறைவனை பிராத்திக்கிறேன் என டத்தோ சிவகுமார் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button