
புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம் மலேசியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு சிறந்த ஏற்பாடுகளை செய்த அமைச்சர் ஃபஹ்மி பட்சிலுக்கு பாராட்டு
புத்ராஜெயா, ஆக.31-
நாட்டின் 67ஆவது
சுதந்திர தின கொண்டாட்டம் புத்ராஜெயாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தகவல், தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பட்சில் சிறந்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக மக்கள் பலரும் பாராட்டு தெரிரிவித்துள்ளனர்.
இந்த தேசிய தின கொண்டாட்டம் மலேசியர்கள் மனதை கவர்ந்திருந்தது என்பது இங்கு குழுமியிருந்த கிட்டத்தட்ட 100,000 மலேசியர்கள் சான்றாகும். மேலும்
சுதந்திர தினம் மற்றும் மலேசிய தின ஏற்பாட்டுக் குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் 67ஆவது தேசிய தின கொண்டாட்டம் டத்தாரான் புத்ராஜெயாவில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் இந்த கொண்டாட்டத்தில் தலைமையேற்று சிறப்பு செய்தார்.
மேலும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சர்கள், துணையமைச்சர்கள், தூதர்கள், உயர் அரசு பணியாளர்கள் என பலரும் தேசிய தின கொண்டாட்ட அணிவகுப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு் நடைபெற்ற அணிவகுப்பில் கிட்டத்தட்ட 17,000 பேர் கலந்து கொண்டனர். இவர்களின் அணிவகுப்புலமக்களை பெரிதும் கவர்ந்திருந்தது.
புத்ராஜெயாவில் நடைபெற்ற இந்த தேசிய தின கொண்டாட்டம்
மலேசியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுவதற்கு
சிறந்த ஏற்பாடுகளை செய்த அமைச்சர் ஃபஹ்மி பட்சிலுக்கு மக்கள் பலரும் பாராட்டு் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



