Malaysia

பினாங்கு இந்து இயக்கம், தீபாவளி திருநாளை வசதிக் குறைந்த இந்திய மக்களோடு கொண்டாடி மகிழ்ந்தது.

இந்து அறப்பணி வாரியத் தலைவர் மாண்புமிகு ஆர்.என்.என் ராயர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் அவர்கள் மற்றும் பினாங்கு மாநில ம.இ.கா துணை
தலைவர் திரு. கேசவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து சிறப்பித்தனர்.

பினாங்கு மாநில தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி

பினாங்கு,அக்.20-
தொடர் நிகழ்வுகள் பல நடத்தி மாநிலத்திலேயே ஒரு அதிசிறந்த இயக்கமாக திகழ்ந்து வரும் பினாங்கு இந்து இயக்கம் தனது வருடாந்திர நிகழ்வாக பொருளுதவியுடன் பண அன்பளிப்பு வழங்குதல் நிகழ்வை, இங்குள்ள மாசாராகாட் பெஞாயாங் மண்பத்தில்
சிறப்பாக நடத்தி வெற்றிக் கண்டது.

சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், பொது இயக்கங்களின் தலைவர்கள், வனிகர்கள் மற்றும் இந்து இயக்க பொறுப்பாளர்களுடன் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாக நடத்தப்பட்டது குறித்து பிரமுகர்களும் வருகையாளர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

இயக்கத் தலைவர் டத்தோ ப.முருகையா அவர்களின் தலைமையுரையில், வருகையாளர்களை வரவேற்றுப் பேசினார்.
இந்நிகழ்வு வெற்றிப்பெற உதவிய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் குறிப்பாக,
இந்து அறப்பணி வாரியம் மற்றும் மாநில ம.இ.காவிற்கும் தனது இயக்க சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

பல ஆசிரம குழந்தைகள், மற்றும் வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்குமான பொருளுதவிகள் மற்றும் பண உதவிகளும் வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்து அறப்பணி வாரிய தலைவர் மாண்புமிகு ஆர்.எஸ்.என் ராயர் அவர்களும் துணைத் தலைவர் செனட்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன் அவர்களும் தங்களது அறப்பணி வாரியம் வழங்கி வரும் நல்லுதவிகள் குறித்து பேசினர்.

இந்து இயக்க செயலாளர் திரு.பரஞ்சோதியின் நன்றியுரையுடன் தீபாவளி அன்பளிப்பு நிகழ்வு ஒரு நிறைவெய்தியதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button