
நாசி கண்டார் உணவகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படாமலிருக்க வியூகம் வரைந்த பேராக் இந்திய முஸ்லிம் வர்த்தக சபை.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, அக்.20
தூய்மையை பேணாத காரணத்திற்காக ஒரு சில நாசி கண்டார் உணவகம்
மூட உத்தரவு கொடுக்கப்பட்டது சுட்டிக்காட்டி அதிர்ச்சி தெரிவித்த பேராக் இந்திய முஸ்லிம் வர்த்தக சபை அதன் பெயரை தொடர்ந்து கட்டிக்காத்து நிலை
பெற வியுகம் வரைந்துள்ளதாக அதன் தலைவர் முகமட் போர்ஹான் முகமட் ஹாலாவுடின் தெரிவித்தார்.
இந்த திடுக்கிடும் தகவல் சுற்றுப்பயணிகளிடத்தில் அச்சத்தை ஏற்ப்படுத்த அதனால் வியாபார
பாதிப்பை உண்டு பண்ண சாத்தியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பேராக் சுகாதார இலாகாவின் நடவடிக்கையானது
இதர உணவகங்களிடத்தில் அச்சத்தை உருவாக்கிவிட பெரும் இழப்பை ஏற்ப்படுத்தலாம் என சொன்னார்.
ஈப்போ மாநகர் மன்றம், பேராக் சுகாதார இலாகா
ஆதரவுடன் உணவக பராமறிப்பு பட்டறை ஒன்றை ஏற்ப்படுத்த இருப்பதாக கூறிய
அவர் எல்லா இன உணவகங்கள் பங்கு கொண்டு நன்மை பெற வேண்டினார்.
இங்குள்ள பேராக்
கட்டடத்தில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை கவனத்திற்கு கொண்டு வந்தார்.



