
ஈப்போ நில அதிர்வு வெடிப்புச் சத்தம் ஏற்பட்டது ஏன்?
ஈப்போ, அக்.22-
ஈப்போ மாநகரில் திங்கட்கிழமை காலை சுமார் 11.06 மணியவில் திடிரென வெடிப்பு சத்தமும், நிலநடுக்கம் அதிர்வும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களின் வாயிலாக தகவல் கிடைக்கப் பெற்றதாக பேராக் போலீஸ்படை தலைவர் டத்தோ பாஹாலவீன் ஹஜி அஜிசி ஹஜி மாட் அரிஸ் தமதறிக்கையில் கூறியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக பேராக் போலீஸ் தரப்பினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இங்குள்ள உலுகிந்தா இராணுவ பயிற்சி முகாமை தொடர்புக்கொண்டபோது அங்கு எந்தவொரு பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் எந்தவொரு ்வெடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, பேராக் நிலவள இலாகாவை தொடர்புக்கொண்டு ஏதேனும் குவாரிகளில் வெடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா என்ற பரிசோதனையில் அப்படியொரு சம்பவமும் இடம் பெறவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், இந்தேனிஷியா நேரப்படி காலை மணி சுமார் 11.24 க்கு திடிரென வெடிப்பும் நிலநடுக்கம் அதிர்வும் இந்தோனிஷியா ஹால்மகேரா என்ற இடத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.
எதுஎப்படியிருப்பினும், பொதுமக்கள் இந்த வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் சம்பவம் குறித்த தகவல் இருக்குமானால் தயவு செய்து கீழ் குறிப்பிட்ட எண்ணுடன் 05-2451119 தொடர்புக்கொள்ளமாறு அவர் கேட்டுக் கொண்டார்.



