
தெரு நாய்களும் இறைவன் படைப்பு நாய்களுக்கு மாதம் தோறும் 1,500 வெள்ளி செலவிடும் மலாய் பெண்மணி
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ
ஈப்போ, அக்.22
தெரு நாய்களும் இறைவன் படைப்பு
என கூறும் 47 வயது மலாய் பெண்மனி நஜிரா அப்துல் ராமான் என்பவர் அன்றாடம் அல்லது சில சமயம் வாரம் ஒரு முறை நாய்களுக்கு கோழி எலும்பு,சோறு வாங்குவதற்க்கு ரிம 1,500 வெள்ளி செலவிடுவதாக
பத்துகாஜா சேர்ந்தவரான அவர் சொன்னார்.
இதற்கு இரு வெவ்வேறு வேலை செய்வதாக. கூறிய
அவர் அதிகாலை 12.30 மணியளவில் இங்குள்ள ஸ்டேசன் 18 மற்றும் லகாட் மைன்ஸ் போன்ற இடம் சென்று உணவினை போடுவதாக கூறினார்.
தூரத்திலிருந்து எனது காரை தெரிந்து கொண்டு தெரு நாய்கள் காரை தொடர்ந்து வந்து நிறுத்தும் வரை பொறுமை காக்காது என்றார்.
எனக்கு நன்றி செலுத்தும் விதம் சாப்பிட்ட பிறகு வாலை அசைக்கும்
போது நிம்மதி பெருமூச்சு அடைவேன் என்றார்.

தெரு நாய்களுக்கு உணவு கொடுக்க
நிதி உதவி செய்ய
நினைக்கும் பரிவுமிக்க மலேசியர்கள்
தன்னை 012- 5335133 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள
வேண்டினார்.



