
Malaysia
சாய்ந்த கோபுரம் வளாகத்தில் மக்கள் தேச பற்று ஒன்று திரலா? போலிஸ் எச்சரிக்கை.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தெலுக் இந்தான், நவ.15-
தெலுக் இந்தான் பட்டணம் சாய்ந்த கோபுரம் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நம்பப்படும் மக்கள் தேச பற்று
ஒன்று கூடும் நிகழ்வில் பொது மக்கள் கலந்து கொள்வதிலிருந்து தவிர்க்கமாறு போலிஸ் நினைவுப்படுத்தியது.
தெலுக் இந்தான் நகராண்மை மன்றம் அவ் விடத்தை பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளதால்
பொது மக்கள் அங்கு கூடுவதிலிருந்து
தவிர்க்குமாறு ஹிலிர் பேராக் மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் அமாட் அட்னான் பஸ்ரி நினைவுப்படுத்தினார்.
வரும் சனிக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அந்த நிகழ்விற்க்கான போலிஸ் அனுமதி.விண்ணப்பம் கடந்த திங்கட்கிழமை ஏற்ப்பாட்டாளர்களிடமிருந்து பெறப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.



