
Malaysia
கேமரன் மலை தானா ரத்தா- ரிங்லட் 54 ஆவது கிலோ.மீட்டரில் மண் சரிவுடன் மரங்கள் விழுந்தது
தேசம் செய்திகள் சாரா
கேமரன் மலை, நவ.15-
கேமரன் மலை தானா ரத்தா – ரிங்லட் 54 ஆவது கிலோ மீட்டர் பிரதான இரு வழி சாலையில் மண் சரிவு சம்பவம் நிகழ, உடன் பெரிய.மரங்கள் வேரோடு சாய்ந்து இரண்டு மணி நேர
போக்கு வரத்து பாதிப்புக்குள்ளானது.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய கேமரன் மலை மாவட்ட போலிஸ் தலைவர் டி.எஸ்.பி. அஸ்ரி ரம்லி இந்த
சம்பவத்தினால் எந்த ஒரு உயிருடச் சேதம் எதுவும் நிகழவில்லை என
சொன்னார்.
புதன் கிழமை மாலை 3-45 மணியளவில் நடந்த சம்பவம் அடுத்து இரண்டு மணி நேரம் சென்று போக்கு வரத்து சீராக இருந்ததாக தெரிவித்தார்.



