
டத்தோ அப்துல் மாலிக் பக்கத்தில் இருப்பது பினாங்கை சேர்ந்த Ishak இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஜபார் சாதிக் இல்லை இன்னும் என்னதான் செய்யப் போகிறீர்கள்?
தேசம் அதிரடி அலசல் குணாளன் மணியம்
கோலாலம்பூர், மார்ச் 19-
ஒரு தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைபடத்தில் டத்தோ அப்துல் மாலிக் பக்கத்தில் இருக்கும் Ishak என்ற ஒரு நபர்தான் இந்தியாவில் பிடிபட்ட ஜபார் சாதிக் என்ற ஒரு புகைப்பட காணொளி சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டு வருவது தவறான தகவலாகும் என்று தேசம் மேற்கொண்ட அதிரடி அலசலில் தெரியவந்துள்ளது.
செர்டாங்கில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில் 2018 பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்ள டத்தோ மாலிக் அங்கு சென்றிருந்தார். அந்த நிகழ்வை தொடக்கி வைத்து சம்பந்தப்பட்ட தமிழ்பள்ளிக்கு நன்கொடையும் வழங்கியிருந்தார்.
அச்சமயத்தில் நிலநிற பாத்தேக் சட்டை அணிந்திருந்த டத்தோ மாலிக்கின் நண்பராக பினாங்கை சேர்ந்த Ishak என்பவர் உடனிருந்தார். அந்த Ishak என்ற நபர்தான் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஜபார் சாதிக் என்று ஒரு கும்பல் ஆங்கிலத்தில் பேசி உடனடியாக ஒரு காணொளியை வெளியிட்டு போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த தகவல் அடிப்படையற்றது. பினாங்கை சேர்ந்த Ishak என்பவர் டத்தோ மாலிக்கின் நண்பர். அவர் எப்படி ஜபார் சாதிக் ஆக முடியும்? இதில் இன்னொரு விஷயம் Jafar Sadique என்ற பினாங்கை சேர்ந்த ஒரு நபரும் அதனை டத்தோ மாலிக்கிற்கு அதனை Tag செய்துள்ளார். முகநூல் பக்கத்தில் சென்று பார்த்த போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படி இப்படியொரு தவறான தகவலை வெளியிட முடிகிறது எனும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் டத்தோ மாலிக்கை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் இதனை வன்மையாக மறுத்துள்ளார். தமிழ்ப்பள்ளி நிகழ்வில் கலந்து கொண்டு நன்கொடை வழங்கினேன். இதில் பலரும் என்னொடு படம் எடுத்துக் கொண்டார்கள். அப்போது Ishak என்ற எனது நண்பரும் உடனிருந்தார். அவரை சுட்டிக்காட்டி இந்தியாவில் ஜபார் சாதிக் என்று கூறுவது அப்பட்டமான பொய் என்று டத்தோ மாலிக் கூறினார்.
இந்த பொய்த்தகவலை பரப்பும் அல்லது பகிரும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ மாலிக் எச்சரித்துள்ளார்.
மலேசியாவை சேர்ந்த ஒரு கும்பல் சம்பந்தமில்லாமல் டத்தோ மாலிக்கை எப்படியாவது மாட்டி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. உண்மையை வெளிக்கொணரவே இந்த செய்தியை வெளியிடுகிறோம். இங்குள்ள படங்களையும் செய்திகளை பார்க்கும் போது 2018இல் செர்டாங்கில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளிக்கு டத்தோ மாலிக் நன்கொட வழங்கியுள்ளார். இதனை களங்கப்படுத்த வேண்டுமா? களங்கப்படுத்தும் நோக்கம் என்ன?
தேசம் அதிரடி அலசல் தொடரும்…



