
Malaysia
எந்த சமூக மக்களும் ஓரங்கட்டப்பட மாட்டார்கள் அமிருடின் ஷாரி உறுதி
செமினி, நவ.23-
சிலாங்கூர் மாநிலத்தில் எந்த சமூக மக்களும் ஓரங்கட்டப்பட மாட்டார்கள் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதியளித்துள்ளார்.
நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் முறையாக செயல்படுகிறது என்று நான் கூற மாட்டேன். பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், அனைத்து மக்களுக்கும் சிறந்த சேவை வழங்கப்படுகிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இதில் நான் உறுதியாக உள்ளேன். சிலாங்கூர் மாநிலத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்
வாயிலாக மக்கள் பயன்பெறுவார்கள் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னார்.



