Malaysia

ஐ-பேப் திட்டத்தின் கீழ் 20 நிறுவனங்களுக்கு 15 லட்சம் வெள்ளி மானியம் டத்தோ ரமணன் தகவல்

கோலாலம்பூர், நவ.28-
ஐ-பேப் எனப்படும் திட்டத்தின் கீழ் 20 நிறுவனங்களுக்கு 15 லட்சம் வெள்ளி 20 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் கூறினார்.

கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட 20 இந்திய சிறு வணிக நிறுவனங்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 61 விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து தகுதித் தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

இந்திய சிறு தொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காக எஸ்எம்இ கோர்ப்பின் கீழ் ஐ-பேப் திட்டம் உருவாக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 6 மில்லியன் இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது.

இதுவரை 20 நிறுவனங்கள் என மொத்தம் 70 சிறு தொழில் வணிகர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.

ஐ-பேப் திட்டத்தின் வாயிலாக மானியம் பெற்ற நிறுவனங்களுக்கு ஒப்புதல் கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது டத்தோஸ்ரீ இரமணன் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button