
மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்தது பங்சார், ஜாலான் தெலாவி 2 புதிய காரசாரம் உணவகம் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரம்பூர்வமாக திறந்து வைத்தார்
கோலாலம்பூர், நவ.28-
பங்சார், ஜாலான் தெலாவி 2 இல் புதிதாக திறப்பு விழா கண்ட காரசாரம் உணவகம் மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளதை தொடர்ந்து ம.இ.கா தேசிய துணைத்தலைவர்ர
டத்தோஸ்ரீ எம்.சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பங்சாரில் காரசாரம் உணவகத்தின் 18ஆவது கிளையான ‘பங்சார் Claypot காரசாரம்’ உணவகம் திறப்பு விழா கண்டது. இதனைமுன்னிட்டு நவம்பர் 27 புதன்கிழமை பிற்பகல் 1.10 மணி தொடங்கி மறுநாள் நவம்பர் 28 பிற்பகல் 1.10 மணிவரை தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு வழங்கி மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்றது.

இந்த காரசாரம் உணவகத்தின் இலவச உணவு இன்று நவம்பர் 28இல் நிறைவு பெற்ற நிலையில் டத்தோஸ்ரீ சரவணன் சாதனை புத்தகத்தின் நிறைவு விழாவை முடித்து வைத்தார். காரசாரம் எணவகத்தின் உரிமையாளர்களுக்கும்இந்த சாதனைக்கும் உறுதுணையாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் டத்தோஸ்ரீ சரவணன் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
மலேசியாவில் உணவக வரிசையில் குறுகிய காலத்தில் காரசாரம் உணவகம் 18 கிளை உணவகங்களை திறந்து சாதனை படைத்துள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



