
கம்பன் கழக விழாவை ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் டில்லி திருவள்ளுவர் கலையரங்கத்தில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்
புதுடில்லி,டிச.1-
கம்பன் கழக விழாவை ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் டில்லி திருவள்ளுவர் கலையரங்கத்தில் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் உட்பட பல நாடுகளிலில் இருந்தும் தமிழ் நாட்டிலிருந்தும் பேராளர்கள் கலந்துக் கொண்டனர்.
கம்பன் கவிதை போல மனம் களிக்கச் செய்யும் கவிதை வேறில்லை. கம்பன் கவி நயத்தை கையில் எடுத்து விட்டால் கீழே வைக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பாக, அனைத்துச் சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் கம்பன் பாடல்கள் இருக்கும் என தமதுரையில் டத்தோஸ்ரீ சரவணன் கம்பனை புகழ்ந்தார்.
அழகுத் தமிழ் தந்த அதிசயமே
அணையா தீபமாய் என் இதயத்தில்
கம்பர் நீ கவிதை நடையில் கம்பருக்கு மகுடம் சூட்டினார்.
தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்கள் ஏராளம். ஆனால் தமிழர்களுக்காக தமிழை காத்து தமிழர்களுக்கு பல இலக்கியச் சொத்துகளை விட்டுச் சென்ற தலைவர்களை இயற்கையே பாதுகாக்கிறது. உயர்ந்த பொருட்களை இயற்கை பாதுகாக்கும் என சொன்ன டத்தோஸ்ரீ எம். சரவணன் அந்த மேடையில் அப்படிபட்ட தலைவர் விட்டுச் சென்ற காவியங்களை வரிசை படுத்தினார்.
ஆனால் தமிழ் சமுதாயம் இப்படிபட்டவர்களை இலக்கிய முன்னோர்களாக பார்த்ததே தவிர தலைவர்களாக பார்க்கவில்லை என்று டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.



