Malaysia

கம்பன் விழாவில் பங்கேற்க புதுடில்லி வந்துள்ள இலக்கிய வேந்தர்’ டத்தோஸ்ரீ சரவணன்னுக்கு புதுடில்லியில் கோலாகல வரவேற்பு

 

புதுடில்லி, நவ.30-
புதுடில்லி கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக புதுடில்லி வந்துள்ள ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களுக்கு புதுடில்லி கம்பன் கழகத்தார் கோலாகல வரவேற்பு நல்கினர்.

‘எய்ம்ஸ்ட்’ பல்கலைக்கழக இணைவேந்தரும் மலேசிய கண்ணதாசன் அறவாரியத் தலைவருமான ‘சொல்வேந்தர்’ மு.சரவணன், தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் இலக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராகவும் பேச்சாளராகவும் கலந்து கொள்ளும் நிலையில் தற்போது புதுடில்லி கம்பம் விழாவில் பங்கேற்றுள்ளார்.

புதுடில்லியில் சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெறும் டில்லி கம்பன் கழகத்தின் 2024ஆம் ஆண்டு கம்பன் விழாவில் கலந்து கொள்ள
புதுடில்லி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ள தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களை டில்லிக் கம்பன் கழகத் தலைவர் கே வி கே பெருமாள், செயலாளர் எஸ். பி. முத்துவேல், பொருளாளர் சரவண ராஜன், செயற்குழு உறுப்பினர் எஸ். ரவிச்சந்திரன் மற்றும் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் மேலாளர் காந்தி ஆகியோர் மலர்கொத்து வழங்கி எதிர்கொண்டு வரவேற்றனர்.

புதுடில்லி கம்பன் கழக விழாவில் சிறப்பு பிரமுகராக கலந்துக்கொள்ளும் ‘சொல்வேந்தர்’ டத்தோஸ்ரீ எம்.சரவணன். அந்த விழாவை அதிகாரபூர்வமாக தொடக்கி வைக்கிறார்

2024 கம்பன் கழக விழா இந்திய நேரப்படி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு அதாவது மலேசிய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கியது.

இவ்விழாவை தொடக்கி வைத்த செந்தமிழ்ச் செல்வர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பேராளர்கள் மத்தியில் தமிழ்ச் சார்ந்த உரை நிகழ்த்தவுள்ளார்.
சில வருடங்களாக உலக நாடுகளில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் உலக தமிழ்ச் சமுதாய ஆளுமையாக பார்கப்பட்டு
அழைக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button