Malaysia

மலேசியா கோடீஸ்வர் தான்ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் காலமானார் ஈடு செய்ய முடியாத இழப்பு என்கிறது அவரது USAHA TEGAS நிறுவனம்

கோலாலம்பூர்,நவ.28-
மலேசியாவின் கோடீஸ்வரர் தான்ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் வயது மூப்பு காரணமாக தமது 86 வயதில் காலமானார்.

மலேசியாவின் மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றியுள்ள தான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் மறைவு செய்தியை அவரின் USAHA TEGAS நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது
தான்ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் நாட்டிற்கு பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் மலேசியாவின் மூன்றாவது பெரிய பணக்காரராக தான்ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் இடம்பிடித்தார். ஆஸ்ட்ரோ, மெக்ஸிஸ், ஆகிய நிறுவனங்களை தான்ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் நிறுவியதுடன் நடப்பு USAHA TEGAS நிறுவனத்தின் நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.

தான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று USAHA TEGAS நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்ததுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button