
Malaysia
மதிப்பீட்டு வரியை சிறிது குறைக்க ஈப்போ மாநகர் மன்றம் சம்மதம்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, நவ.29-
முன் மொழியப்பட்ட
9 சதவிகித ஈப்போ
மாநகர் மன்றத்தின்
மதிப்பீட்டு வரியை
சிறிது குறைக்க
சம்மதம் தெரிவித்துள்ளது.
இத் தகவலை வெளியிட்ட ஈப்போ
மேயர் டத்தோ ருமாய்சி பஹாரின்,
42 வருடம் சென்று இப்போது அதிகரிக்கப்பட
இருக்கும் 9 சதவிகித
வரி ஏற்றத்திற்கு
18,000 புகார்கள் கிடைக்க 6 சதவிகிதம் சொத்துடமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க
மீதமுள்ள 94 சதவிகிதம் சொத்துடமையாளர்கள் எதிர்ப்பு தரவில்லை என்றார்.
எது எப்படியிருப்பின், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து சிறிது குறைக்கலாம்
என்றார்.



