
வாழை மரம் வெட்டுனரின் மகள் திவ்யா வர்த்தக நிர்வாகத் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்
ஈப்போ,டிச.16-
சாதனை படைக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணமும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி அடையலாம் என்பதற்கு சான்றாக வாழை மரம் வெட்டுனர் தமிழ்ச்செல்வம்- பூமதி தம்பதியரின் புதல்வி திவ்யா புத்ரா பல்கலைகழகத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் முதல் நிலையில் முதுகலை பட்டம் பெற்றார்.
யு.பி.எஸ்.ஆர், பி.எம்.ஆர், எஸ்.பி.எம், என அனைத்து அரசாங்க தேர்வுகளிலும் ஏக்கள் மட்டுமே பெற்று குடும்பத்திற்கு பெருமை சேர்த்தவர் திவ்யா.
வாழ்க்கையில் நம்முடைய முயற்சி இருந்தால் அனைத்திலும் சிறந்து விளங்கலாம் என்பதற்கு திவ்யா எடுத்துக்காட்டு.
அதனுடன், இந்த வெற்றியை அடைய உறுத்துணையாக இருந்த குடும்பத்திற்கும் அனைவருக்கும் திவ்யா நன்றி கூறினார்.
திவ்யா நுண்ணுயிரியல் துறையில் மலாயா பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் நிறைவு செய்தவர். அவரின் வெற்றிக்கு திவ்யாவின் தாயாரான நாட்டின் புதழ்பெற்ற அறிவிப்பாளர் பூமதியின் பங்களிப்பு அளப்பரியது. மகள்கள் அனைவருமே வாழ்ககையில் சிறந்து விளங்க பூமதி குடும்பத்தை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்



