
மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையாருக்கு சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது தேசம் ஊடகம் வழங்கி கௌரவித்தது டத்தோஸ்ரீ எம்.சரவணன் விருதை எடுத்து வழங்கினார்
கோலாலம்பூர் டிச.18-
தேசம் ஊடகத்தின் அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழாவில் இந்திய சமுதாய மக்களுக்கு குறிப்பாக கலைஞர்களுக்கு காப்பாளராக இருந்து வரும் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையாருக்கு தேசம் ஊடகம் சேவைக்கான வாழ்நாள் சாதனயாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த தேசம் விருதளிப்பு விழா டிசம்பர் 13 வெள்ளிக்கிழமை மாஸ்ஹா பல்கலைக்கழகத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விருது விழாவில் சிறந்த முறையில் சேவையாற்றி வந்த பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் மலேசிய தமிழ் கலைஞர்கள், ஏழை எளிய மக்களுக்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி வரும் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையாருக்கு சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை ம.இ.கா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் ரத்னவள்ளி அம்மையாரிடம் எடுத்து வழங்கினார்.
ரத்னவள்ளி அம்மையார் இந்திய சமுதாய மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி நல்கியுள்ளார். இதில் குறிப்பாக கலைஞர்களுக்கு பல வழிகளில் நிதியுதவி வழங்கியுள்ளார். இவரிடம் உதவி பெறாத கலைஞர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல உதவிகளை நல்கியுள்ளார்.
இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக் கொண்ட ரத்னவள்ளி அம்மையார் தேசம் குழுமத்திற்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



