
பினாங்கு, ஜூன் 8-
பினாங்கு மாநிலத்தில் சில சாலைகளுக்கு இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனுக்காவும் பாடுபட்ட காலஞ்சென்ற இந்திய முஸ்லிம்களின் சமுதாய தலைவர்களின் பெயர்கள் அறிவிப்பு பலகைகளில் வைத்தது குறித்து மாநில அரசுக்கு பினாங்கு பெலிதா சங்கத்தின் தலைவர் டாக்டர் முஹமது நசீர் மோஹிடின் தனது தாழ்மையான நன்றியினை தெரிவித்து கொண்டார்

அண்மையில் மறைந்த கபிதான் பள்ளிவாசலின் தலைமை இமாம் டத்தோ ஹாஜி உஸ்தஸ் அல் ஃபாதில் எஸ். எ அப்துல்லாஹ் புகாரி அவர்களின் பெயரை புதிதாக ஒரு சாலைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, பினாங்கு மாநில மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பாக இமாம் அப்துல்லாஹ் புஹாரி அவர்களின் மார்க்க சேவை மற்றும் சமய இலாக்கவிற்கான பங்களிப்பு போன்ற சேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்ததாக மாநில மக்கள் பிரதிநிதி மாண்புமிகு ஜைரில் கிர் ஜொஹாரி கூறினார்.
இம்முயற்சியில் மிகுந்த ஆர்வம் செலுத்தி அதற்கான முறையான வேளைகளில் இறங்கியது மஸ்ஜித் கபிதான் தலைவர் டத்தோ ஹாஜி ஃபாருக் மற்றும் அவரது நிர்வாக குழு என்பதில் மிகையாகாது.
கடந்த 2011ஆம் ஆண்டில் மூத்த தலைவர் ஜனாப் ஹஜி ஏ எஸ் மன்சூர் (Jln A.S. Mansoor) அவர்களின் மக்கள் சேவைகள் மற்றும் மாநில நலன் சேவைகள் தொடர்பாக அன்னாரின் பெயர் பினாங்கு மாநிலத்தில் ஒரு சாலைக்கு சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்க செய்தியாகும்,


அதற்கான ஆரம்ப வேலையாக 2009ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரிடம் மனு கொடுத்தாகவும் தமக்கு முழு உதவி புரிந்தவர்கள் ஹாஜி டத்தோ ஜைனுல் ஆலம் மைடின் மற்றும் காலஞ்சென்ற அல்மற்ஹும் ஹஜி தஸ்லீம் இன்னும் பல நண்பர்கள் என ஜனாப் முனைவர் மொஹமட் நசீர் அவர்கள் நினைவு கூர்ந்தார்.
இதுபோல் பல சமயம்சர்ந்த தலைவர்கள் மாநில மக்களுக்காக இன சமய பேதம் பார்க்காமல் சேவைகள் புரிந்தவர்கள் சமுதாயத்தில் வாழ்ந்து மறைந்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெயர்களையும் நாம் மறந்துவிட கூடாது குறிப்பாக ஹாஜி எஸ் எம் இட்ரீஸ், ஷேக் அலாவுதீன், மற்றும் பலர் போன்றோர் என பெலிதா சங்க தலைவர் டாக்டர் முஹமத் நசீர் மோஹிடின் செய்தியாளரிடம் தெரிவித்தார்.



