
தேசம் ஊடகத்தின் அனைத்துலக சாதனையாளர்கள் விருதளிப்பு விழா டத்தோ சிவபாலன் சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு டத்தோஸ்ரீ எம்.சரவணன் விருதை எடுத்து வழங்கினார்
கோலாலம்பூர், டிச.18-
ஊடகத் துறையில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்து இன்றளவும் துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டத்தோ சிவபாலன் தேசம் ஊடகத்தின் அனைத்துலக சாதனையாளர்கள் விருதளிப்பு விழாவில் சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தேசம் ஊடகத்தின் 15ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாஸ்ஷா பல்கலைக்கழகத்தில் ஏழாம் ஆண்டு விருதளிப்பு விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விருது விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழாவில்
பெர்னாமா செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஊடகவியலாளரும் துன் சாமிவேலுவின் பத்திரிகை செயலாளருமான டத்தோ சிவபாலன் சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பெர்னாமா செய்தி நிறுவனத்தின் மூலம் சமுதாயத்திற்கு பல பயனுள்ள படைப்புகள் மற்றும் செய்திகளை வழங்கியவர் டத்தோ சிவபாலன். அதன்பிறகு துன் டாக்டர் ச.சாமிவேலு அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அவரின் பத்திரிகை செயலாளராக டத்தோ சிவபாலன் திறம்பட பணியாற்றினார்.
அதன் பின்னர் தகவல் தொடர்பு துறை அமைச்சில் பணிபுரிந்த சிவபாலன் தற்போது தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாஹ்மி பாட்சில் அவர்களின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரின் அளப்பரிய சேவைகளை பாராட்டும் வகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கும் இவர் பக்கப்பலமாக இருந்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
இந்த தருணத்தில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் டத்தோ சிவபாலன் அவர்களுக்கு சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் மற்றும் செயலவை உறுப்பினர்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.



