Malaysia

சக பல்கலைக்கழக மாணவனை தாக்கிய மூவர் போலிஸ் ஜாமீனில் விடுவிப்பு

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

பாரிட், டிச.22
இங்குள்ள ஸ்ரீ இஸ்கண்டார் யூ.ஐ.டி.எம் பல்கலைக்கழக
18 வயது மாணவனை அதன்
ஆசிரம அறையில் 18-20 வயது சக மூன்று மாணவர்கள் தாக்கி முகம் , கை, வயிறு பகுதியில்
காயம் விளைவித்துள்ளதாக பேராக் தெங்கா மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹாவ்சுல் எல்மி ஹம்சா சொன்னார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை
நிகழ்ந்த இச்சம்பவம் தொட்டு பாதிக்கப்பட்ட
மாணவனின் தந்தை சென்ற செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணியளவில் போலிஸ் புகார் செய்த மறுகணம்
மூவரும் தடுத்து வைக்கப்பட்டு ஒரு சில நாளில் போலிஸ் ஜாமினில்
விடுவிக்கப்பட்டதாக கூறினார்

நால்வரிடத்தில் எழுந்த கருத்து
வேறுப்பாட்டினால்
இந்த தாக்குதல்
ஏற்ப்பட்டதாக சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button