Malaysia

பத்துமலையில் 140 அடி முருகன் சிலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் தான்ஸ்ரீ நடராஜா, டத்தோஸ்ரீ சரவணன் கலந்து கொண்டனர்

பத்துமலை, ஜன.1-
பத்துமலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட 140 அடி முருகன் சிலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பன்னீர் அபிஷேகம் செய்தனர்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா, ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்து கொண்டனர்.

முருகப்பெருமானுக்கு நடைபெற்ற 9ஆவது பன்னீர் அபிஷேகம் இதுவாகும். அடுத்தாண்டு 10ஆண்டு பன்னீர் அபிஷேக விழாவும் 140 அடி முருகன் சிலை 20ஆண்டு நிறைவு விழாவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்று செய்தியாளர்கள் தான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

10 மலையில் அமைந்துள்ள 140 அடி முருகன் சிலைக்கு ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்று பன்னீர் அபிஷேக விழா நடத்தப்படுகிறது.
அடுத்த ஆண்டு இது பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை எட்டுகிறது.

ஆகையால், இந்த பன்னீர் அபிஷேக விழாவை இன்னும் விமர்சையாக கொண்டாட தேவஸ்தானம் இலக்கு கொண்டுள்ளது என்று டான்ஸ்ரீ நடராஜா சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button