
மஇகா இளைஞர், மகளிர், புத்ரா தலைவர்களாக அர்விந்த், சரஸ்வதி, சத்தீஸ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு புத்ரி தலைவி, துணைத் தலைவி பதவிக்கு நேரடி போட்டி தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பு
தேசம் செய்திகள் குணாளன் மணியம்,
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், ஜூன் 8-
ம.இ.காவின் 2024-27ஆம் ஆண்டுக்கான கட்சித் தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்
மஇகா இளைஞர், மகளிர், புத்ரா தலைவர்களாக அர்விந்த், சரஸ்வதி, சத்தீஸ் ஆகியோர் போட்டியின்றி தேர்வுப் பெற்றுள்ளதாக மஇகா தேசியத் தலைவரும் தேர்தல் குழு தலைவருமான தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

கட்சியின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 8 சனிக்கிழமை மஇகா தேசியத் தலைவரும் தேர்தல் குழு தலைவருமான தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவராக அர்விந்த் கிருஷ்ணன் போட்டியின்றி வெற்றி பெற்றார். கேசவன் கந்தசாமி புதிய துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
2 மத்திய செயலவை உறுப்பினருக்கு கலையரசன், சுகன்ராஜ் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். அதேநேரத்தில் 18 தேசிய உச்சமன்ற உறுப்பினர் பதவிக்கு 29 பேர் போட்டியிடுகின்றனர். 100 பேராளர்களுக்கு எந்த போட்டியும் இல்லை.

இந்நிலையில் கெமலா சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மகளிர் பிரிவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். டாக்டர் தனலெட்சுமி புதிய துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
2 மத்திய செயலவை உறுப்பினருக்கு விக்னேஸ்வரி, கிருஷ்ணவேணி ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். தேசிய உச்சமன்றம், பேராளர்களுக்கு எந்தப் போட்டியும் இல்லை.
புத்ரா பிரிவின் புதிய தலைவராக டாக்டர் சத்திஸ் போட்டியின்றி தேர்வு பெற்றார். அமிர்வேன் புதிய துணைத் தலைவராக தேர்வு பெற்றார். தேசிய உச்சமன்றம், பேராளர் பதவிகளுக்கு எந்த போட்டியும் இல்லை.
புத்ரி பிரிவின் தலைவி பதவிக்கு தீபா, ரவீனா ஆகியோரும் துணைத் தலைவி பதவிக்கு பிரேமளா, கிருபா நந்தினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பு செய்தார்



