Malaysia

தமிழ்ப்பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் போதிக்க கல்வியமைச்சு முட்டுக்கட்டையா? ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் எல்.சிவசுப்ரமணியம் கேள்வி

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர்,ஜன.22-
ஆரம்ப பள்ளிகள் மற்றும் தாய்மொழி பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் போதிப்பதற்கு கல்வியபைச்சு முட்டுக்கட்டையாக இருக்கிறதா என்று ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் எல்.சிவசுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதில் குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளீல் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் போதிப்பதற்கு அப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு படிநிலைக்கும் குறைந்தபட்சம் ஒரு கூடுதல் வகுப்பறை இருக்க வேண்டும் என்ற கல்வியமைச்சின் விதிமுறை அப்பாடங்களை ஆங்கில மொழியில் போதிப்பதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக சிவசிப்ரமணியம் கூறினார்.

நாடு தழுவிய நிலையில் இருக்கும் 530 தமிழ்ப்பள்ளிகளில் 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் ஒரு வகுப்பறை மட்டுமே இருக்கிறது. இதனால் இருமொழி பாடத்திட்டதில் அப்பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் கேட்டுக் கொண்டால் மட்டுமே இருமொழி பாடத்திட்டத்தை அமல்படுத்த முடியும் என்ற கல்வியமைச்சின் விதிமுறை அப்பாடங்களை ஆங்கில மொழியில் போதிப்பதற்கான ஒரு தடையை போடுவதாக சிவசுப்பரமணியம் விளக்கினார்.

இந்த விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சு 19 மார்ச் 2024 தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை தமிழ்ப்கள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையினால் பல தமிழ்ப்பள்ளிகள் குழப்பத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளதாக சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.

கல்வியமைச்சின் இந்த விதிமுறைகளுக்கு ஏற்ப கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய இருபாடங்களை ஆங்கில மொழியில் படிக்கும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் உள்ள இடைநிலைப்பள்ளிகளில். படிக்கச் செல்லும் போது மொழி பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். ஆங்கிலத்தில் படித்து விட்டு இடைநிலைப்பள்ளிகளில் மீண்டும் தேசிய மொழிகளில் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக சிவசுப்ரமணியம் சொன்னார்.

தமிழ்ப்பள்ளிகள் இருக்கும் வட்டாரங்களில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் போதிப்பது இல்லை. அவர்கள் மலாய் மொழியில் போதிக்கினறனர். இது ஆங்கில மொழியில் அப்பாடங்களை படித்த மாணவர்களுக்கு பிரச்சினையாக இருப்பதாக சிவப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் கல்வியமைச்சு ஒரு திட்டவட்டமான போக்கை கடைபிடிக்க வேண்டும். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் போதிக்கும் திட்டத்திற்கு கல்வியமைச்சு கொண்டு வந்துள்ள ஒவ்வொருபடிநிலை வகுப்புக்கும் ஒரு கூடுதல் வகுப்பறை வேண்டும் என்ற விதிமுறையே முட்டுக்கட்டையாக இருக்கிறது. அப்படியே விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டாலும் இடைநிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது என்று சிவசுப்ரமணியம் தெளிவுபடுத்தினார்.

உலகளவில் ஆங்கில மொழியின் பயன்பாடு இருப்பதால் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் முழுமையாக போதிக்க கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் இடைநிலைப்பள்ளிகளில் மேற்கண்ட பாடங்களை ஆங்கில மொழியில் போதிப்பதை கல்வியமைச்சு உறுதி செய்ய வேண்டும் என்று ம.இ.கா ஊடக பிரிவு தலைவருமான எல்.சிவசுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button