
Malaysia
சிரமப்படும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சீருடை பள்ளி பொருட்கள் வழங்க நிதி தேசிகன் பிள்ளை வழங்கினார்
பினாங்கு,ஜன.27-
வாழ்க்கையில் பெற்றோர்கள் இல்லை என்பது பெரும் சவால். ஆனால் அது ஒரு போதும் தம்மை சமூக சேவையில் ஈடுப்பட தடையாக அமையாது என பினாங்கு போக்கோக் மச்சாங் பகுதியை சேர்ந்த தேசிகன் பிள்ளை கூறினார்.
பினாங்கு பழனியாண்டி தமிழ்ப்பள்ளியை சேர்ந்த 10 மாணவர்களுக்கு அவர் பள்ளிக்கு வேண்டிய பொருட்கள் வாங்க நிதி வழங்கினார்.
பாகான் நிபுணத்துவ மருத்துவமனை மருத்துவர் டாக்டர் வாசு இந்த நிகழ்விற்கு பெரும் ஆதரவு வழங்கியதாக தேசிகன் தெரிவித்தார்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளாக டாக்டர் வாசு மக்களுக்கு உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்

இதனிடையே பழனியாண்டி தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் கார்த்திக் மாரி தேசிகனுக்கும் டாக்டர் வாசுவிற்கும் நன்றி கூறினார்.



