
பத்துமலை தைப்பூசத்தில் மலேசிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுல இயக்கம் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் பிப்ரவரி 10,11இல் ஆற்றங்கரையோரம் நடைபெறும் பொதுமக்கள் பொருளுதவி, நிதியுதவி வழங்க கோரிக்கை
பத்துகேவ்ஸ்,பிப்.1-
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். அது உணர்வோடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 28ஆம் ஆண்டாக பத்துமலை தைப்பூசத்தில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க மலேசிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுல இயக்கம் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.
அருள் மற்றும் அன்பின் வெளிப்பாடு அன்னதானம். தருமம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற கூற்றுக்கு ஏற்ப இன்று நாம் செய்கின்ற தருமங்கள் அனைத்தும் நம்மை மட்டுமல்லாது நமது தலைமுறையும் காக்கும் கவசமாகும். இந்த உயர்வான நோக்கத்தை முன்னிறுத்தி ஒவ்வொரு ஆண்டும் மலேசிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுல இயக்கம், பத்துமலை தைப்பூசத்திற்கு வருகை புரியும் பக்தர்களின் பசியை போக்க அன்னதானம் வழங்கி வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டும் அன்னதானம் 28வது முறையாக பிப்ரவரி 10,11 ஆகிய தேதிகளில் பத்துமலை ஆற்றங்கரையோரம் நடைபெற உள்ளது. இந்த அன்னதானம் சிறப்பாக நடைபெற பொதுமக்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை! ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல்! இந்த மகத்தான சேவையை நாம் ஒன்றிணைந்து மேற்கொள்ள பொதுமக்கள் உதவி
நல்க வேண்டும் என்றுமலேசிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுல இயக்கம் கூறியது.
இதற்காக இந்த அன்னதானத்தில் பொருளுதவி செய்ய மக்கள் அழைக்கப்படுகின்றனர். பொதுமக்கள் பொருள் கொடுத்த உதவலாம். அல்லது நிதி வழங்கி உதவலாம். இந்த அன்னதானத்திற்கு அரிசி, பருப்பு, வெங்காயம், உருளைகிழங்கு உள்ளிட்ட பல்வேறு மளிகைபொருட்களை வழங்க விரும்பும் பொதுமக்கள் மலேசிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுல இயக்கத்தின் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மலேசிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுல இயக்கத்தின் அன்னதானம் கடந்த காலங்களில் பொதுமக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த அன்னதானத்திற்கும் பொதுமக்கள் தங்களால் இயன்ற பொருளுதவி அல்லது நிதியுதவியை வழங்கலாம். நிதியுதவி வழங்க விரும்புகிறவர்கள் திரையில் காணும் QR CODEஐ ஸ்கேன் செய்து நிதி வழங்கலாம். அல்லது திரையில் காணும் வங்கி கணக்கு எண்ணில் பணத்தை பட்டுவாடா செய்யலாம் என்று மலேசிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுல இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
Maybank AC 514141443651 தொடர்புக்கு
03-6187 6773 அல்லது 012-9329650.



