Malaysia

சித்தர்கள் வழிமுறையை தெரிந்து கொள்ள வேண்டும் ஈப்போ குனோங் ராப்பாட்டில் பிரம்ம ஸ்ரீ குண்டலினி சிவயோக மலைக்குகை ஆலயம்

ஈப்போ,ஜன.1-
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முறையில் பல வழிப்பாடு முறைகள் உள்ளன. அவர் அவர் மனதிற்கு ஏற்ற வழிப்பாட்டில் அனைவரும் உள்ளனர். அந்த வகையில் சித்தர்கள் வழிமுறை வழிப்பாடு என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய ஈப்போ மாநகரத்தில் குனோங் ராப்பாட் எனும் இடத்தில் பிரம்ம ஸ்ரீ குண்டலினி சிவயோக ஆலயம் எனும் பிரம்ம ஸ்ரீ குண்டலினி சித்தர் சாமி சமாதி கொண்ட ஆலயம் ஒரு புண்ணிய மலை குகையில்
அமைந்துள்ளது.

சித்தர்களின் அருள் ஆசி
பெற்ற குகையில் இதுவும் ஒன்றானது என்பது மறுக்க‌ முடியாத உண்மையாகும் என அந்த ஆலயத்தின் நிர்வாகிக்கும் தலைவர் நாக சகாயன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இக்குகையில் சுயம்பு
லிங்கமும் சுனை நீர் கங்கை போல் அமைந்துள்ளது என்பது கண்களுக்கு பெரிய‌ காட்சி. பிரம்ம ஸ்ரீ குண்டலினி சித்தர் சாமி அவர்கள் மாபெரும் தவம் செய்து மகா ஞானியாய் வாழ்ந்தவர் என‌ அவர்‌ கூறினார்.

இவர் தாப்பா ஜெகந்நாதர்
ஆலயத்தின் ஆரம்ப நிலை சீடரும் மற்றும் குருக்களான சின்னசாமி ஐய்யாவின் மூத்த
மகனாவார். சிறு வயது முதல் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு பல மலைகளில் தவம் செய்து வாழ்ந்து வந்தவர். அவர் தனது வாழ்நாளில் பல்லாயிரம் கணக்கான சித்தர்கள்
பாடல்களை ஆய்வு செய்து, அதன் ரகசியங்களை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக எளிமையான முறையில் அதை அனைவருக்கும் தன் காலம் முழுவதும்
கற்றுக் கொடுத்தவர்.

மேலும் அதன் வழியே பிரம்ம ஸ்ரீ குண்டலினி சிவயோக ஆலயம்
உருவாக்கப்பட்டது.2016ஆம் ஆண்டு தை மாத மூலம் நட்சத்திரத்தில் பிரம்ம ஸ்ரீ
குண்டலினி சித்தர் சாமி அவர்கள் சமாதி கொண்டார்.

யோகமும் ஞானமும் உலகெங்கும்
நிலைக்க இந்த அற்புதம் நிறைந்த
மலையில் சித்தர்கள் வழியில் இம்மலைகுகைக்குப் பிரம்ம ஸ்ரீ குண்டலினி சிவ யோக
ஆலயம் என பெயர் சூட்டி 18 சித்தர்கள் வழியில் தர்ம பணி துவங்கப்பட்டுள்ளது.

அதன்படியே குருவின் சமாதி பீடம் அமையப் பெற்று இந்த மலைக்குகை அந்த பெயராலே
அழைக்கப்படுகிறது.
இன்று பிரம்ம ஸ்ரீ குண்டலினி சிவ யோக ஆலயம் குருபிரானின் ஆஸ்தான சீடர் பிரம்ம ஞான சித்தர் சாமி அவர்களால்
வழி நடத்தப்படுகிறது.

இங்கு இலவசமாகச் சித்தர்களின் வாழ்வியல் கல்வியைப் போதனை செய்கிறார்கள். 2024 ஆண்டு 12 மாதம் 15ஆம் தேதி கார்த்திகை மாத அண்ணாமலையார் தீபத்தன்று குருவருளும் திருவருளும் கூடி இவ்வாலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

உலகிலே முதன் முறையாக திரிபுர சுந்தரி மற்றும் பாலாம்பிகையோடு கூடிய 18 சித்தர்கள் திருச்சபை பாலஸ்தாபன திருப்பணி கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற அதில் ஏளாரமானோர் பங்கேற்றனர்.

இந்த புண்ணிய சேத்திரத்தில் பஞ்சமா சமாதி பீடங்களும் அமையப் போகின்றது.
ஐந்து சித்தர்கள் இங்கு வருங்காலத்தில் சமாதி கொள்வார்கள் என்று சித்தர்கள் கருணை கூர்ந்து உள்ளார்கள்.

இத்திருப்பணியைச் செய்து முடிக்க தங்களால் முடிந்த நன்கொடையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆலயத் திருப்பணி செய்வது கோடி புண்ணியாம், அதிலும் சிவாலயத் திருப்பணி செய்வது பலகோடி புண்ணியமாம், மேலும் சிவ சித்தர்கள் திருப்பணி செய்வது யுகக்கோடி புண்ணியமாம்.

சித்தர்கள் நமக்கு‌ விட்டுச் சென்ற‌ பொக்கிஷங்களை அனைவரும் தெரிந்து கொள்வதோடு அதன் போல்‌ பின்பற்றி நடக்க வேண்டும். இந்த‌ திருத்தலத்திற்கு‌ வருகையளிக்க‌ விரும்புவர்கள் 0165434809 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button