
பத்துமலையில் மின் படிக்கட்டு, பல்நோக்கு மண்டபம் ஆராய்ந்து அனுமதி வழங்கப்படும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தகவல்
பத்துமலை,பிப்.3-
பத்துமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் மின் படிக்கட்டுகள் மற்றும் பொதுமண்டபம் ஆகிய இரு திட்டங்கள் மக்களுக்கு பெரும் பயனை அளிக்கும் என்பதால் அதன் அனுமதி விரைந்து வழங்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அந்த விண்ணப்பங்கள் முறையாக ஆராயப்பட்டு அவ்விரு திட்டங்களுக்கும் உரிய அனுமதிகள் வழங்கப்படும். இந்த அனுமதிக்கு கால அவகாசம் தேவைப்படும். இருந்தாலும் அதற்கு அனுமதி பெற்று தருவது தனது கடமையாகும் என்று அமிருடின் தெரிவித்தார்.
இந்த திட்டங்களுக்கு தேவஸ்தானம் முறையாக விண்ணப்பம் செய்து உள்ளதால் மக்கள் நலன் கருதி அது கவனிக்கப்படும் என்று அமிருடின் சொன்னார்.
பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டு, பல்நோக்கு மண்டபம் கட்டுவதற்கு் தேவஸ்தானம் உரிய அனுமதியை .
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியிடம் கோரியுள்ளது.

மந்திரி புசார் சிறப்பு வருகை மேற்கொண்டு திங்கட்கிழமை பத்துமலைக்கு வருகைத் தந்தார்.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா, மந்திரி புசாருக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.
அதனை தொடர்ந்து தேவஸ்தானத்துடன் நடந்த கூட்டத்தில் மந்திரி புசார் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின் போது அவரிடம் மின் படிக்கட்டு, மாபெரும் பல்நோக்கு மண்டபம் கட்டுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் குறிப்பாக இவ்விரு திட்டங்களுக்கான அனுமதி பெறுவதற்கான அனைத்து ஆவணங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் மந்திரி புசார் கலந்து கொண்டார்.



