
Malaysia
பிரசங்கத்தின் உரையை படிக்க மறுத்த இமாம் மீது போலிஸ் புகார்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, பிப்.3-
கடந்த வெள்ளிக்கிழமை தெலுக் இந்தானிலுள்ள ஒரு மசூதியில்
பிரசங்கத்தின் உரையை படிக்க
மறுத்த ஒரு இமாம்
மீது ஈப்போ மாவட்ட
போலிஸ் நிலையத்தில் தித்தி சேரோங் முன்னாள் சட்டமன்ற
உறுப்பினர் ஹாஸ்னுல் சுல்கார்னாயின் அப்துல் முனாய்யிம்
போலிஸ் புகார் செய்தார்.
பேராக் இஸ்லாம் சமய இலாகா தயார் செய்த பிரசங்கத்தின் உரையை படிக்காமல் 2023 ஆம் ஆண்டின் பிரசங்கத்தின் உரையை வெள்ளிக்கிழமை
நாளில் படித்தது ஏற்ப்புடையதல்ல
என அவர் சொன்னார்.



