
இந்தோனேசிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலில் பந்தாய் ரெமிஸ் மீனவர்கள்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, பிப்.20-
இந்தோனேசிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலால் பந்தாய் ரெமிஸ் மீனவர்கள் பெரும் பாதிப்பை சந்திப்பதாக பந்தாய் ரெமிஸ் சட்டமன்ற உறுப்பினர் வோங் மெய் இங் குற்றம் சாட்டினார்.
மலாக்கா நீரணைப் பகுதியில் மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபடும் சி மற்றும் சி 2 தர உரிமம் கொண்டுள்ள மீனவர்கள் இந்த
கடற் கொள்ளையர்களால் மிரட்டப்படுவதோடில்லாமல் மீனவர்களின் படகினையும் உடன் அண்டை நாட்டிற்க்கு இழுத்து செல்வதாக அவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இந்தோனேசிய கடற் கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட ஏறக்குறைய 5 புகார்கள் கிடைக்க பெற்றுள்ளதாக சொன்னார்.



