
பத்துகேவ்ஸ் Roubdabout ஸ்ரீ சிவ முனீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி, ஸ்ரீ மஹா ருத்ர யாகம் பக்தர்கள் கலந்து கொள்ள ஆலய தலைவர் சுதேசன் அழைப்பு
கோலாலம்பூர்,பிப்.25-
ஸ்ரீ சிவ முனீஸ்வரர் ஸ்ரீ மங்களாம்பிகை சமேதர் ஸ்ரீ கங்காதரேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி தசதினம், ஸ்ரீ மஹா ருத்ர யாகம்
கோலாலம்பூர்,பிப்.25-
மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ சிவ முனீஸ்வரர் ஸ்ரீ மங்களாம்பிகை சமேதர் ஸ்ரீ கங்காதரேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி தசதினம், ஸ்ரீ மஹா ருத்ர யாகம் பிப்ரவரி 26 புதன்கிழமை மாலை 5 மணிக்கு 1ஆம் கால பூஜையும் இரவு 11 மணிக்கு 2ஆம் கால பூஜையும் பின்னிரவு 1.30 மணிக்கு 3ஆம் கால பூஜையும் அதிகாலை 4 மணிக்கு 4ஆம் கால பூஜையும் நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு மஹா அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனையுடன் மஹா சிவராத்திரி நிறைவு பெறும்
இந்நிலையில் பிப்ரவரி 27 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் ஸ்ரீ பைரவர்-ஸ்ரீ சண்டிகேஸ்வரர் மஹா அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் சுற்று வட்டார மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி ஆலய தலைவர் திரு.ஆர்.சுதேசன் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்புக்கு 012-2101252.



