
அம்மா என்று அன்போடும் அழைக்கும் கோபிந்த் சிங் டியோ ஜசெக தலைவராக வெற்றி பெற்றது அவரது ஆளுமையை காட்டுகிறது புலிக்கு பிறந்தது பூனையாகுமா? தந்தை கர்ப்பால் சிங் வழியில் தனையன் கோபிந்த் சிங் டியோ விஜயராஜ்-ரத்னவள்ளி அம்மையார் வாழ்த்து
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர், மார்ச் 16-
நாடாளுமன்றத்தில் சிங்கமாக கர்ஜித்த அரசியல் ஆளுமை கர்ப்பால் சிங் அவர்களின் புதல்வரான கோபிந்த் சிங் டியோ ஜசெக தலைவராக வெற்றி பெற்றுள்ளது அவரது அரசியல் ஆளுமையை காட்டுவதாக திரு.விஜயராஜ்-ரத்னவள்ளி அம்மையார் தங்களின் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளனர்.
எப்போது பார்த்தாலும் கைப்பேசியில் அழைத்தாலும் அம்மா என்று அன்போடும் அழைக்கும் பண்பும் அன்பும் கொண்ட கோபிந்த் சிங் டியோ ஜசெக தலைவராக வெற்றி பெற்றது அவரது அரசியல் ஆளுமையை காட்டுகிறது. ஜசெக தேர்தலில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் இருவரும் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தோம். அதன்படி அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகளை திரு.விஜயராஜ் – ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்துக் கொண்டனர்.
கோபிந்த் சிங் நல்ல மனிதர். எப்போது அழைத்தாலும் பேசுவார். அப்படி அவரால் அழைப்பை எடுக்க முடியவில்லை என்றால் சில மணிநேரம் கழித்து அழைத்து பேசுவார். இந்த பண்பு யாருக்கு வரும்? ஒரு துறை அவர் தொடர்பு அமைச்சராக இருந்த போது ஆர்.டி.எம்மிற்கு சந்திக்க சென்ற போது காக்க வைக்காமல் உடனே சந்தித்தார். நான் கொண்டு சென்ற சில விவகாரங்களை தீர்த்து வைத்தார். இப்படிபட்ட பண்பு கொண்ட கோபிந்த் சிங் டியோ ஜசெகவுக்கு பொருத்தமான தலைவர் என்று ரத்னவள்ளி அம்மையார் புகழாரம் சூட்டினார்.
நாடாளுமன்றத்தில் சிங்கமாக கர்ஜித்த கர்ப்பால் சிங் அகால மரணமடைந்த சமயத்தில் இறுதி சடங்கிற்கு பினாங்கு சென்றிருந்தேன். அப்போது கடுமையான மழை. வரிசையில் நின்ற என்னை ஆள் சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார். நான் இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பினேன். இப்படிப்பட்ட தூய ஆத்மா ஜசெக தலைவராக வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி என்று ரத்னவள்ளி அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
தந்தை கர்ப்பால் சிங் வழியில் தனையன் கோபிந்த் சிங் டியோ துடிப்போடு செயல் பட்டு வருகிறார். கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
சிங்கம் என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு அரசியல் ஆளுமையாக இருந்த தந்தை கர்ப்பால் சிங் வழியில் எதிர்க்கட்சியான ஜசெகவில் இணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் கோபிந்த் சிங் டியோ என்று ரத்னவள்ளி அம்மையார் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 1973ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி கோபிந்த் சிங் பிறந்தார். ஜசெக முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த நிலையில் 2008இல் பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றிருந்தார் கோபிந்த் சிங். அதன்பிறகு தொடர்ச்சியாக பூச்சோங்கில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஆட்சியில் தொடர்பு அமைச்சராக இருந்த கோபிந்த் சிங், தற்போதைய மடானி அரசாங்க ஆட்சியில் இலக்கவியல் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில் டாமான்சாரா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கோபிந்த் சிங் டியோ. பூச்சோங்கில் மூன்று தவணைகள் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் கோபிந்த் சிங் டியோ.
இந்த அரசியல் பயணத்தில் தந்தை கர்ப்பால் சிங்கை போல் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ள கோபிந்த் சிங் டியோ, இந்த மடானி அரசாங்கத்தில் இலக்கவியல் அமைச்சராக இருப்பது ஜசெக கட்சிக்கு பெருமை சேர்த்துள்ள நிலையில் ஜசெக தலைவராக வெற்றி பெற்றுள்ளதாக ரத்னவள்ளி அம்மையார் கூறினார்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதற்கு ஏற்ப தந்தை வழியில் அரசியல் ஆளுமையாக இருக்கும் கோபிந்த் சிங் டியோ ஜசெக தலைவராக வெற்றி பெற்றமைக்கு திரு.விஜயராஜ்-ரத்னவள்ளி அம்மையார் இருவரும் வாழ்த்தி
பாராட்டினர்.



