Malaysia

ஒப்பனை துறையில் பெண்களின் ஈடுபாடு வருமானத்தை ஈட்டித்தரும் MONASHA SKILL ACADEMYயின் ஒப்பனை பயிற்சில் பங்கேற்ற 70 பயிற்சியாளர்கள் பட்டமளிப்பு விழாவில் பல்வேறு பிரிவுகளில் பட்டம் பெற்றனர் தோற்றுநர், முதல்வர் திருமதி மோகனகுமாரி பலகிருஷ்ணன் தகவல்

கோலாலம்பூர்,மார்ச் 17-
ஒரு காலத்தில் வீடு, வீட்டின் சமயலறை என்று கதியாக கிடந்த பெண்கள் இன்று தனியாக சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெண்கள் எல்லா துறைகளிலும் ஈடுபாடு கொண்டு செயலாற்ற வேண்டும் என்று MONASHA SKILL ACADEMY தோற்றுநர், முதல்வர் திருமதி மோகனா அறைகூவல் விடுத்துள்ளார்.

அந்த வகையில் ஒப்பனை துறையில் ஈடுபாடு காட்டும் பெண்கள் கண்டிப்பாக முன்னேற்றத்தை காண்பார்கள். பணம் சம்பாதிப்பார்கள் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை என்று
70 பயிற்சியாளர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் பயிற்சியாளர்களுக்கு பிரமுகர்கள் நிர்வானா கல்வி குழும இயக்குநரும் MIPP கட்சியின் தலைவருமான புனிதன் பரமசிவம்முடன் இணைந்து நற்சான்றிதழ் மற்றும் அங்கீகாரம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றீய போது
MONASHA SKILL ACADEMY முதல்வர் திருமதி மோகனா அவ்வாறு கூறினார்.

கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி MONASHA SKILL ACADEMY ஒப்பனை நிறுவனத்தை நடத்தி வரும் மோகனா ஆர்வம் காரணமாக தமது 15ஆவது வயதில் ஒப்பனை துறையில் ஈடுபாடு கொண்டார்.
வீடு, வாசல் என்ற காலமெல்லாம் மலையேறி விட்டதாக கூறும் மோகனாவின் மொத்த வருமானத்தையும் ஒப்பனை நிறுவனம் தருகிறது என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்த போது பலரும் கைதட்டி பாராட்டி ஆரவாரம் செய்தனர்.

ஒப்பனை துறையில் பகுதி நேரமாக ஈடுபாடு கொண்டு அதன் பிறகு 2006இல் MONASHA SKILL ACADEMY ஒப்பனை நிறுவனத்தை தொடங்கி கடந்த 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் திருமதி மோகனா, 5 முறை தம்மிடம் நற்சான்றிதழ், டிப்ளோமா, டிகிரி, மாஸ்டர் படித்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பட்டமளிப்பு விழாவையும் நடத்தியுள்ளார் என்பது பிரமிக்க வைக்கும் முயற்சியாகும் என்றால் அது மிகையில்லை.

ஒப்பனை என்பது பெண்களுக்கு முக்கியமான ஒன்றாகும். அதுவே வருமானம் ஈட்டும் தொழிலாக இருந்தால் சொல்லவும் வேண்டுமா? MONASHA SKILL ACADEMY ஒப்பனை நிறுவனத்தில் 3 மாதம் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் வரையில் CERTIFICATE, DIPLOMA, DEGREE, MASTER ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்கேற்ற நியாயமான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடன் மோகனா சொன்னார்.

அதேநேரத்தில் B40 பிரிவைச் சேர்ந்த பெண்களுக்காக சிறப்பு ஒப்பனை வகுப்புக்கள் சிறப்பு கழிவு கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சி மட்டுமன்றி அனைத்து பயிற்சிகளிலும் முக ஒப்பனை, விதவிதமான வகையில் சேலை அணிவது, கலைஞர்கள் ஒப்பனை, சினிமா ஒப்பனை, மாறுபட்ட தோற்ற ஒப்பனை என்று அனைத்து விதமான ஒப்பனை பயிற்சிகள் வழங்கப்படுவதாக மோகனா கூறீனார்.

MONASHA SKILL ACADEMY ஒப்பனை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 70 பேர் ஒப்பனை துறையின் பல்வேறு பிரிவுகளில் பட்டம் பெற்றனர். அவரவர் படித்த பிரிவுக்கு ஏற்ப நற்சான்றிதழ், அணிவிக்கப்பட்டது. இதில் சிறந்த மாணவியாக ராதா லெக்‌ஷ், நித்திகல்யாணி சிவநேசன் ஆகியோர் வெற்றி பெற்றார். .

மேலும் சிறந்த செயல்திறனுக்காக அர்ச்சனா செல்வம், யோகேஸ்வரி திருவாசகம்,ஹெமலன் கணேசன், பவானி ஆறுணாசலம், சுகன்யா மணிவண்ணன், கார்த தொகை அண்ணாமலை, லோகேஸ்வரி சுப்ரமணியம், கர்ப்பகம் கிருஷ்ணன், சரஸ்வதி தினகரன் மற்றும் லதா சுப்ரமணியம் வேலு ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மேலும் சிறந்த மாணவர்களாக கோமதி பாலகிருஷ்ணன், நாகேஸ்வரி சந்தனசாமி, தேவி சரணி கணேசன், ராஜேஸ்வரி ராஜமாணிக்கம், ரேணுகா ஆறுபுகம், ஆனந்தி வீராசாமி, பிராசுலவதி மனோகரன், மோகன பாய் செஸ்யா, அமுதமலர் சரவணன் சுந்தரம், ஜெயமலர் அர்புவனந்தன், மோகனேஸ்வரி மணியரசன் ஆகியோர் வெற்றி பெற்றனர். சிறப்பு வெற்றியாளர்கள் அனைவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறந்த மூன்று மாணவர்களுக்கு தாய்லாந்து சென்ற வர வாய்ப்பு வழங்கப்பட்டது

இந்த பட்டமளிப்பு விழாவில் திருமதி மோகனா முன்னிலையில் புனிதன் பரமசிவம், டத்தோ மணிமாறன், டத்தோ கணேசன் பாலகிருஷ்ண்ன்,திரு.ஆரோக்கியதாஸ் ஆகியோர் பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பட்டதாரிகள் குடும்பத்தினர், பயிற்சி வழங்கியவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பெண்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்து வரும் MONASHA SKILL ACADEMY ஒப்பனை நிறுவனத்தில் மாணவர்கள் தொடர்ந்து படித்து வருகின்றர். வீட்டில் இருந்தபடியே வருமானத்தை ஈட்ட நினைக்கும் பெண்களுக்கு பத்துமலையில் செயல்படும் MONASHA SKILL ACADEMY ஒப்பனை நிறுவனம் வழிகாட்டுகிறது. வாழ நினைத்தால் வாழலாம்; வழியா இல்லை பூமியில் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்க்கைக்கு வழிகாட்டும் MONASHA SKILL ACADEMY ஒப்பனை நிறுவனத்தை பெண்கள், ஆண்கள் என்று இருபாலரும் நாடலாம். தொடர்புக்கு 012-2090017.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button