
40 ஆண்டுக்காலமாக பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சி கொண்டிருக்கும் சக்கீனா பீ முகமட் அலி
பினாங்கு,மார்ச் 18-
நோன்பு மாதத்தில் சிறப்பு மிகுந்த விஷயம் என்றால் அது நோன்பு கஞ்சிதான். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரம்லான் மாதத்தில் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சி சேவையாற்றிருக்கும் சேவையாளர் சக்கினா பீ முகமட் அலி என்பவர் சாதனையாளர் தான்.
தன்னுடைய குடும்பத்தின் வயிறு நிறைந்தால் போதும் என்று இருக்க ஊரின் வயிறு நிறையவும் 40 ஆண்டுகளுக்கு மேலாக பல கப்பித்தான், கெலாவாய், பிராங்கின் பள்ளிவாசலில் கஞ்சி காய்ச்சியுள்ளார்.
தற்பொழுது கெலாவாய், பிராங்கின் பள்ளிவாசலில் மட்டுமே கஞ்சி காய்ச்சி வருகிறார்.

நோன்பு மாதத்தில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அந்த மாதத்தில் மற்றவர்களுக்கு சேவையாற்றுவதே தன்னுடைய விருப்பம் என சக்கினா கூறினார்.
சக்கினா உண்மையிலேயே சிறந்த சேவையாளர் என கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹேங் தெரிவித்தார்.



