Malaysia

இவ்வாண்டின் தைப்பூச வசூல் 619,241 வெள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் 1 இலட்சம் ரிங்கிட் நிதியுதவி

ஈப்போ, மார்ச் 18-
இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் ஏற்பாட்டில் ஈப்போ கல்லுமலை ஆலயத்தில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் சிறப்பாக மிகவும் நடந்தேறியது.

இந்த தைப்பூச திருவிழாவின் வசூல் 619,241.00 ரிங்கிட் என்று ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் இரா.சீதா இராமன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதுமட்டுமின்றி, இந்த தைப்பூச திருவிழாவில் சிறப்பு பிரமுகராக கலந்துக்கொண்ட பேராக் மாநில இந்திய சமூகநலத்துறை, சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன், 1 இலட்சம் ரிங்கிட் மானியத்தை பேராக் மாநில அரசு வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில் இந்த தைப்பூச திருவிழா சிறப்பாக நடைப்பெற உதவிய பேராக் மாநில அரசாங்கம், போலீஸ் தரப்பினர், தீயணைப்பு பாதுகாப்பு படையினர், ரேலா பாதுகாப்பு படையினர் மற்றும் சீருடை பணியாளர்கள் அனைவருக்கும் ஆலய சார்பில் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாண்டு தைப்பூச வசூல் கடந்தாண்டைவிட சுமார் 50 ஆயிரம் ரிங்கிட் அதிகமாகும். இந்த நிதியை கொண்டு மேலும் அதிகமான வசதிகள் பக்தர்களுக்கு செய்து தரப்படும். இதனால் இறைவழி செய்ய வரும் பக்தர்கள் நெரிசலிலிருந்து தவிர்க்க அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

இவ்வாண்டு தைப்பூசத்தில் பல வகையில் உதவிகள் வழங்கிய நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள், பல உதவிகள் வழங்கியதோடு சுற்றுச்சூழலை துப்புரவு செய்து தூய்மையாக வைத்துக்கொண்ட ஈப்போ மாநகர் மன்றத்திற்கும் தன்னார்வலராக சேவையாற்றி ஈப்போ போலிதெக்னிக் உங்கு ஓமார் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இதர உயர்கல்விகூட மாணவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் தலைவர் இரா.சீதா இராமன் ஆலய சார்பில் தம் நன்றியை பதிவு செய்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button