
பெருவாஸ் இந்தியர்களின் இணையற்ற நம்பிக்கைகுரிய நண்பனாக இருந்து வருகிறேன் டத்தோ ங்கே கூ ஹாம் திடகாத்திரம்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
பெருவாஸ், நவ.6-
தோட்ட பின்னணி சூழலில் வாழ்ந்து வந்து இந்தியர்களின்
குறிப்பாக தோட்ட வாழ் இந்திய அன்பர்களின் உணர்வை மதித்து நடந்து கொண்டு அவர்களுக்கு உதவி நல்கி வருவதாக பெருவாஸ் நாடாளமன்ற உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாம்
பேசியதும் வந்திருந்த இந்தியர்களின் கைத்தட்டலை பெற்றார்.
பெருவாஸ் நாடாளமன்ற தொகுதி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் உரையாற்றிய அவர் இந்தியர்களின்
நலனை.முன் நிறுத்தி அவ்வப்போது உதவி வருவதாக
சொன்ன அவர் சிறு பிரயத்திலேயே இந்திய நண்பர்களை அதிகம் கொண்டு அவர்களிடம் அளவளாவி பழை நினைவுகளை பகிரும் போது மட்டற்ற மகிழ்ச்சியில்
திளைத்ததாக சொன்னார்.

இந்த நிகழ்வில் மாநில ஆட்சி மன்ற
உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம், மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் ஷாசா வீரையா, அஸ்தகா சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் இங் தியேன் இயோங், பந்தாய் ரெமிஸ் சட்டமன்ற் உறுப்பினர் வோங் மெய் இங் , பெங்காலான் பாரு சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் நோ
ஆகியோர் சிறப்பு வருகை புரிய இந்தியர்கள் தவிர்த்து இதர இனத்தினர் இந்திய பாரம்பரிய
உடை அணிந்து வந்திருந்ததை பார்த்து அகம் மகிழ்ந்தனர்.



