Malaysia

ஜெலாப்பாங் , தம்பாஹான் பாரு ஓம் தேவா ஶ்ரீ மதுரைவீரன் ஆலயத்திற்கு சியா பாவ்‌ ஹியான் 3000 வெள்ளி நன்கொடை

ஈப்போ,மார்ச் 13-
ஜெலாப்பாங், தம்பாஹான் பாரு பகுதியில் அமைந்திருக்கும் ஓம் தேவா ஶ்ரீ மதுரைவீரன் ஆலயத்தின் 36 ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருவிழாவிற்கு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் , ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான் ஆகியோர்‌ சிறப்பு வருகை புரிந்தனர். 5,000 பக்தர்கள் புடைசூழ ஐயனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

ஆலயத் தலைவர் தீபன் சக்கரவரத்தி தலைமைத்துவத்தில் திருவிழா நிறைபெற்றது.
தொடர்ந்து‌, பக்தர்களுக்கு அன்னதானம் வாழையிலையில் பரிமாறப்பட்டது.

மேலும் ஆலயத்திற்கான புதிய‌ நிலம் முயற்சியில் பக்தர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என‌‌ கேட்டுக் கொண்டார்.

பலர் விமரிசையாக நடைபெறும்‌ இந்த‌ திருவிழாவிற்கு காத்திருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆலயத்திற்கு சியா பாவ் ஹியான் 3000 வெள்ளி உதவிநிதி வழங்கினார்.

இந்த ஆலயத்தின் திருவிழாவிற்கு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் ஆலயத் தலைவர் தீபன் சக்கரவரத்தி நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button