
Malaysia
பல்லின மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்
மலேசிய இந்துகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான் தீபத் திருநாள் வாழ்த்து
ஈப்போ,அக்.10 – மலேசியாவில் பல்லின மக்களும் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான் கூறியுற்ளார். மலேசியாவில் வாழும் அனைத்து இந்துக்களின் முதன்மை பண்டிகையாக திகழும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள் அனைவருக்கும் சியா பாவ் ஹியான் தனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மலேசியாவில் பல்லின மக்கள் வசிப்பதால் அனைவரும் ஒன்றினைந்து தீபத் திருநாளை கொண்டாடுவோம். நம் நாட்டு மக்களின் ஒற்றுமை நிலைநாட்ட நாம் அனைவரும் பங்களிப்போம் என்று தெரிவித்த ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான் மீண்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.



