
கிளானா ஜெயா சீபோர்ட் ஆலய மகா கும்பாபிஷேகம் மார்ச் 24இல் நடைபெறும் ஆலய தலைவர் ராமசந்திரன் பக்தர்களுக்கு கலந்து கொள்ள அழைப்பு
கிளானா ஜெயா,மார்ச் 19-
100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிளானா ஜெயா சீபோர்ட் தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டார பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி ஆலய தலைவர் திரு.ராமசந்திரன் வேலாயுதம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆலயம் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சீபோர்ட் தோட்ட ஆலயமாகும். இந்த ஆலயம் தற்போது இருக்கும் இடத்தில் சுமார் 30 ஆண்டுகள் வீற்றிருப்பதாக தேசம் டிவிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் ராமசந்திரன் தெரிவித்தார்.
இந்த சீபோர்ட் தோட்டத்தில் வசித்த மக்கள் மேம்பாடு காரணமாக வேறு இடங்களுக்கு மாறிச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும்படி ராமசந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
கிளானா ஜெயா சீபோர்ட் தோட்ட ஆலயத்தின் திருப்பணி 13 லட்சம் வெள்ளி செலவில் சில மாதகாலமாக நடைபெற்று வந்த நிலையில் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மார்ச் 24ஆம் தேதி காலை நடைபெறவிருப்பதாக ராமசந்திரன் சொன்னார்.
இந்த ஆலய திருப்பணிக்கு ஆலயத் தலைவர் ராமசந்திரனுடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பிரமுகர்கள், பொதுமக்கள் என்று பலரையும் நேரில் சந்தித்து நிதி பெற்றதாக ஆலய செயலாளர் திரு.P.M.பரிமணன்@ மணன் கூறினார்.
சீபோர்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு பக்தர்களிடமிருந்து நிதியை எதிர்பார்க்கிறோம். பக்தர்கள் கீழ்க்காணும் வங்கி கணக்கு எண்களில் நிதி வழங்கும்படியும் எதுவும் கேள்விகள் இருந்தால் கீழ்க்காணும் கைப்பேஎண்களில் தொடர்பு கொள்ளும்படியும் பரிமணன் கேட்டுக் கொண்டார்.
சீபோர்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மார்ச் 24 காலை 9.30 மணி தொடங்கி நடைபெறும். இதில் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் திரளாக கலந்து ஸ்ரீ மகா மாரியம்மன் அருளை பெற்றுய்யுமாறு ஆலய குருக்கள் சிவ ஸ்ரீ ராஜாமணி பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் விநாயகர், சுப்ரமணியர், ஸ்ரீ மகாமாரியம்மன், சிவபெலுமான், அம்பாள், சண்டிகேஸ்வரர், துர்க்கை அம்மன், முனீஸ்வரர், அஞ்சநேயர் மற்றும் புதிதாக சிவாலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக ராஜாமணி குருக்கள் தெரிவித்தார்.
பக்தர்கள் தங்கள் நன்கொடைகளை கீழ்க்காணும் வங்கி கணக்கு எண்களுக்கு நன்கொடைகளை பட்டுவாடா செய்யலாம்.
JAWATANKUASA PENGURUSAN KUIL SRI MAHA MARIAMMAN KELANA JAYA
ALLIANCE BANK AC NUMBER 142060010019554 தொடர்புக்கு ராமசந்திரன்-016-2453035 அல்லது 012-2513966
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



