InternationalMalaysia

விருதுகள் ஒருவருக்கு ஊக்குவிப்பாக இருப்பதோடு நல்ல சிந்தனைகளை விதைக்கும் Hello Creative ஆதரவில் நடைபெற்ற Meet & Greet நிகழ்வில் டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்து

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்,  ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், ஜன.17-
ஒருவரை உயர்வுக்கு இட்டுச் செல்லும் தேசம் விருது போன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு தர வேண்டும் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற விருதுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஊக்கத்தைத் தருவதோடு மற்றவர்களுக்கும் அவர் நல்ல வழிகாட்டியாகவும் திகழ முடியும் என்று கோலாலம்பூர் Seri Pacific ஹோட்டலில் நடைபெற்ற “தேசம் ” ஊடகத்தின் Meet and Greet நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரையாற்றுகையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் அவ்வாறு கூறினார்.

நல்லெண்ணம், நற்செயல்கள் ஒருவரை வாழ்வில் உன்னத நிலைக்கு இட்டுச் செல்லும் பண்பு கூறுகளாகும். இத்தகைய உயரிய பண்புகளைக் கடைபிடித்தால் ஒருவர் வாழ்க்கையில் உயர்வு காண்பது திண்ணம் என்று டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

ஒரு சிலர் மற்றவர் செய்வதை சதா குறை கூறிக் கொண்டும் மற்றவர்களுக்கு எத்தகைய பயனையும் தராத பேச்சுகளில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கின்றனர். இத்தகையவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும். குறை கூறுபவர்கள் தொடர்ந்து குறை கூறிக் கொண்டேதான் இருப்பார்கள். இவர்களைச் சற்றும் பொருட்படுத்தாது நமது இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்றார்.

தினமுரசு, மலேசிய நண்பன், மக்கள் ஓசை உள்ளிட்ட தமிழ்ப் பத்திரிகைகளில் பணியாற்றியதன் வழி பத்திரிகைத் துறையில் 33 ஆண்டுகள் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ள குணாளன் மணியம். இந்த அனுபவத்தின் வாயிலாக “தேசம்” வார செய்தி பத்திரிகையை கடந்த 31.8.2009 சொந்த முயற்சியில் தொடங்கிய இவர் கால மாற்றத்திற்கு ஏற்ப இன்று இதனை மின்னியல் ஊடகமாக மாற்றி மக்களைச் சென்றடையச் செய்துள்ளார்.

குணாளன் மணியத்தின் இத்தகைய பரிணாம வளர்ச்சி அவரின் கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றிக்குக் கிடைத்த வெற்றியாகும். இது மற்றவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இதுபோன்ற ஆக்கப்பூர்வ பணிகளுக்கு ஆதரவு அளிப்பதில் தாம் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்வதாக டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

“எத்தகைய இன்னல்கள் வந்தபோதிலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என்ற இவரின் மன உறுதி “தேசம் ” விருது விழா 15 ஆண்டு காலம் வெற்றி நடைபோடுவதற்கு உறுதுணை புரிந்துள்ளது”.
குணாளன் மணியம் தனது ஊடக பயணத்தில் மேன்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக் கூறியதோடு ” 2024 தேசம் விருது விழா” மற்றும் “தேசம் இணைய தளம் ” ஆகியவற்றையும் ஒருசேர அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார் டத்தோஸ்ரீ சரவணன்.

தேசம் ஊடகம் கடந்தாண்டு டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் Desam Media International Icon Award அனைத்துலக விருதளிப்பு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்தியது. அவ்விழாவில் கலந்து கொள்ள இயலாத எண்மருக்கு டத்தோஸ்ரீ சரவணன் இந்நிகழ்ச்சியில் விருது வழங்கி சிறப்பித்தார்.
மேலும் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையாருக்கு குணாளன் மணியம் பொன்னாடை, மாலை அணிவித்து சிறப்பு செய்தார். அதேநேரத்தில் டத்தோ கோகிலன் பிள்ளை,
Hello Creative நிறுவன இயக்குநர்கள் சுஜேன், யாத்திஷ் இருவருக்கும் டத்தோஸ்ரீ சரவணன் பொன்னாடை, மாலை அணிவித்து சிறப்பித்தார்.

மஇகா தேசிய உதவி தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை, பிரபல சமூக சேவையாளர் அம்மா ரத்னவள்ளி, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலக தொடர்பு பிரிவு தலைவர் பெ.இராஜேந்திரன், டத்தோ காந்தராவ், தொழிலதிபர் ராம், ராகா அறிவிப்பாளர்கள் கீதா, அன்புள்ள மாறன், Hello Creative இயக்குநர்கள் சுஜேன், யாத்திஷ், ஊடகவியளார்கள், வர்த்தக பிரமுகர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் முதன்மை ஆதரவாளராக Hello Creative நிறுவனம் இருந்தது. அதன் தோற்றுநர் திரு.சிவமணி Hello Creative நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். மேலும் Colors of India நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.சத்தியா தம்பதியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button