
Malaysia
பிகேஆர் ஜெராய் தொகுதித் தலைவர் தேர்தல் பூபாலன் வெற்றி!
ஜெராய் ஏப்.16-
ஜெராய் தொகுதித் தலைவர் பதவி தேர்தலில் பூபாலன் சுப்பிரமணியம் வெற்றி பெற்று அத்தொகுதிக்கு தலவராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த பிகேஆர் ஜெராய் தொகுதி தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட முகமட் ஃப்ரிடோஸ் தான் ஶ்ரீ ஜோகாரி 567 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியினைத் தழுவினார்.
பூபாலனுக்கு 859 வாக்குகள் கிடைக்கப் பெற்று ஜெராய்த் தொகுதி தலைவரானார். பூபாலன் ஜெராய் தொகுதி மக்களிடையே மிகவும் நெருக்கமானவராகவும் சிறந்த சேவையாளராகவும் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.



