
Malaysia
வீட்டை உடைத்து பானை, சமையல் பொருட்கள் திருடிய இருவருக்கு 4 ஆண்டு சிறை.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, ஆக-20
வீட்டை உடைத்து பானை மற்றும் சமையல் பொருட்களை திருடிய குற்றச்சாட்டை ஒத்து கொண்ட ,41,43 வயது நிரம்பிய இரு நண்பர்களுக்கு
இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹில்மியா யூசோப்
ஒவ்வொருக்கும் தலா நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பிறப்பித்தார்.
இக்குற்றத்தை ஆகஸ்ட் மாதம்.14 ஆம்.தேதி காலை 10 மணிக்கும் காலை 10.30 மணிக்கு இடையில்
இங்குள்ள தாமான் ராசா சாயாங் பெர்சியாரான் பெங்காலான் பாராட் -4 எனும் விலாசம் கொண்ட வீட்டில் குற்றம் புரிந்ததாக குற்றச் சாட்டு கொண்டு வரப்பட்டது.



