
கம்பார் வட்டார நான்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு கம்பார் தமிழர் சமுக நலன் மற்றும் முன்னேற்ற சங்கம் பள்ளி கட்டணம் வழங்கியது
கம்பார்,ஜன. 30- கம்பார்
வட்டாரத்தில் இயங்கும் தேசிய வகை கம்பார், மம்பாங் டீ அவான் கம்பார் தோட்டம் மற்றும் மாலிம் நாவார் மெதடிஸ்ட் ஆகிய தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த 152 மாணவர்களின் இவ்வாண்டிற்க்கான பள்ளி கட்டண செலவு தொகையை கம்பார் தமிழர் சமுக நலன் மற்றும் முன்னேற்ற சங்கம் ஏற்று கொண்டது.
கட்டண தொகைகளை வழங்கும் நிகழ்வு இங்குள்ள தேசிய வகை கம்பார் தமிழ்ப்பள்ளியில்
நிகழ்ந்த போது அதனை பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்று கொண்டனர்.
சங்கத்தின் தலைவர் நடராஜா பெரியசாமி பேசும் போது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்ய இந்திய இளம் தொழில் முனைவர்களை அணுகிய போது இன் முகம் காட்டி ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி ஆதரவு தெரிவித்தது போற்றுதலுக்குறியது என பாராட்டு தெரிவித்தார்.
இளம் தொழில் முனைவர்கள் சத்தியகுமார் பாலகிருஸ்ணன், சிவனேசன் ராஜு, இராஜேந்திரன் பேச்சு முத்து ஆகியோரை அவர் சிறப்பு செய்தார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



