
பினாங்கில் “தக்காளிப் பழ” விற்பனையில் பல விலை மாற்றங்கள் பினாங்கு இந்து இயக்கம் சேகரித்த தகவலில் அதிர்ச்சி
பினாங்கு,மே 6-
பினாங்கு மாநிலத்தில் தக்காளிப் பழத்திற்கு பலதரப்பட்ட விலை அறிக்கைகளைக் கண்டு அதிர்ச்சியடைய்துள்ளதாக பினாங்கு இந்து இயக்கத்தின் தலைவர் திரு ப.முருகையா கூறினார்.
பினாங்கு இந்து இயக்கம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மாநில முழுவதும் உள்ள அனைத்து பேரங்காடிகளிலும், காலைச் சந்தைகளிலும் மேற்கொண்ட விற்பனை விலைப் பட்டியலில் இது கண்டறியப்பட்டதாக முருகையா தெரிவித்தார்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற பல புகாரின் அடிப்படையில் இந்த விலை பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
காலை, மாலை சந்தைகளில் சுமார் 250% விழுக்காடு வரை அதிக விலையில் விற்பனையாகி வருவதாக முருகையா சொன்னார்.
சுமார் ஆறு விற்பனை மைய இடங்களில் தக்காளிப் பழ விற்பனையில் உள்ள விலை மாற்றங்களைக் காண முடிந்தது. ஒரு கிலோ தக்காளியின் விலை 2 வெள்ளி முதல் 4 வெள்ளி வரையில் பலதரப்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இது போன்ற வித்தியாசமான விலையில் விற்பனை செய்து வரும் பேரங்காடிகளிலும், சந்தைகளிலும் நம் உள் நாட்டு பொருள் விற்பனை வாரியமும், வாழ்வாதார மையமும் இணைந்து உடனடி சோதனை செய்து உண்மை விலைப் பட்டியலை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பினாங்கு இந்து இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
மேலும், பல காலை, மாலை சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ‘காய் கறிகளுக்கு’ விற்பனை விலைப் பட்டியல் பதாதைகள் அறவே வைப்பதில்லை. ஆகவே, மாநிலத்திலுள்ள அனைத்து விறனை மையங்களும் பழங்கள் மற்றும் காய் கறிகளை ஒரே மாதரியான விலையில் விற்பனை செய்வதோடு, அதன் விலைப் பட்டியலையும் பார்வைக்கு வைக்குமாறு பினாங்கு இந்து இயக்கம் கேட்டுக் கொள்வதோடு, விலை சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் அடிக்கடி விற்பனை விலைச் சோதனைகள் செய்து வர வேண்டுவதோடு, அதன் விலைத் தகவலையும் பொது மக்கள் ‘இணையம் வழி’ எளிதாக கண்டறிய இணைய தொடர்பு முகவரியையும் மக்களுக்கு தந்துதவ வேண்டும் என திரு ப.முருகையா கேட்டுக் கொண்டார்.
தேசம் செய்திகள் குணாளன் மணியம் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



